கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் உதயசூரியன் எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு
|கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள உதயசூரியன் எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
தமிழகத்தில் 15-வது தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளராக சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது ஆதரவாளர்கள் மாவட்ட அவைத்தலைவர், துணை செயலாளர்கள், நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. சென்னையில் இருந்து காரில் கட்சியினர் புடைசூட கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடிக்கு நேற்று மாலை 5 மணிக்கு வந்தார்.
அவருக்கு மாவட்ட துணை செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம் தலைமையில் திரண்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டாசு வெடித்தும், தாரை தப்பட்டை முழங்கவும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பு
பின்னர் திறந்தவெளி ஜிப்பில் நின்றபடி வரவேற்பை ஏற்றுக்கொண்ட உதயசூரியன் எம்.எல்.ஏ.வுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டரர் பூமாலை மற்றும் சால்வை அணிவித்தனர். பின்னர் அவர், திறந்தவெளி ஜீப்பில் ஊர்வலமாக 4 முனை சந்திப்பு வழியாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். வரவேற்பு நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் அரவிந்தன், அன்புமணிமாறன், ஒன்றிய அவைத்தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான ரவிக்குமார், ஏர்வாய் பட்டினம் ஊராட்சி செயலாளர் அன்பழகன், கல்வராயன்மலை ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி கிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரத்தினம் குப்புசாமி, அண்ணாமலை, அர்ச்சனா லட்சுமணன், சின்னகண்ணு, செல்வராஜ், ஆண்டி, பரிகம் சஞ்சீவிகுமார், தாவடிபட்டு சீனிவாசன், பால்ராம்பட்டு பெரியசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம், மாவட்ட பிரதிநிதி சந்திரசேகர், தொழில்நுட்ப நிர்வாகிகள் கரிகாலன், வெங்கடேசன், திலீப், திருப்பதி, மாவட்ட கவுன்சிலர் அன்பு, மாதவச்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை, மாவட்ட துணை செயலாளர் பாப்பாத்தி நடராஜன், ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை உள்பட மாவட்ட ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக உதயசூரியன் எம்.எல்.ஏ.வுக்கு 100 பெண்கள் ஆரத்தி செய்தனர்.