< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை ரதத்திற்கு வரவேற்பு
|17 May 2023 12:30 AM IST
சுரண்டையில் ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை ரதத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுரண்டை:
இந்திய மக்களின் ஒற்றுமைக்காகவும், பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம் தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை செல்லும் ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை நேற்று சுரண்டைக்கு வந்தது. ராஜீவ் காந்தி ஜோதிக்கு சுரண்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் முன்னிலை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமையில் ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பால் என்ற சண்முகவேல், ஏ.கே.எஸ்.சேர்மச்செல்வம், பால்துரை, தெய்வேந்திரன், பிரபாகர், நகராட்சி கவுன்சிலர்கள் அமுதா சந்திரன், ராஜ்குமார், வேல்முத்து, ரமேஷ், உஷா பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.