< Back
மாநில செய்திகள்
பெண் போலீசாருக்கு சமயபுரத்தில் வரவேற்பு
திருச்சி
மாநில செய்திகள்

பெண் போலீசாருக்கு சமயபுரத்தில் வரவேற்பு

தினத்தந்தி
|
22 March 2023 2:26 AM IST

பெண் போலீசாருக்கு சமயபுரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சமயபுரம்:

தமிழக காவல்துறையில் பெண் போலீசார் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு பொன் விழாவாக தமிழக காவல்துறை கொண்டாடி வருகிறது. இதில், முக்கிய அம்சமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை சுமார் 175 பெண் போலீசார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் பல்வேறு மாவட்டங்கள் வழியாக நேற்று மாலை திருச்சி வந்தடைந்தது. இதையொட்டி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சூப்பிரண்டு சுஜித்குமார் சைக்கிளில் சிறிது தூரம் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் கருணாகரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் ப்ரியாபானு மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்