< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சாதனைகளைத் தொடர்ந்து படைக்க 2024-ஐ வரவேற்கிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து
|31 Dec 2023 12:47 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதில், இந்த 2023-ஆம் ஆண்டு நினைவலைகளின் காணொளியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கிய இந்த 2023-ஐ வழியனுப்பி, புதிய அனுபவங்களைப் பெறவும் சாதனைகளைத் தொடர்ந்து படைக்கவும் 2024-ஐ வரவேற்கிறேன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.