சென்டிரல்-புவனேஸ்வர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கம்
|சென்டிரல்-புவனேஸ்வர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரலில் இருந்து மே 6-ந் தேதி முதல் ஜூன் 3-ந் தேதி வரை (திங்கட்கிழமை மட்டும்) ஒரிசா மாநிலம் புவனேஸ்வருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்- 06073) இயக்கப்படும். அதே போல, புவனேஸ்வரில் இருந்து மே 7-ந் தேதி முதல் ஜூன் 4-ந் தேதி வரை (செவ்வாய்க்கிழமை மட்டும்) சென்னை சென்டிரலுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (06074) இயக்கப்படும்.
கோவையில் இருந்து வருகிற 11-ந் தேதி முதல் மே 23-ந் தேதி வரை (வியாழக்கிழமை மட்டும்) ராஜஸ்தான் மாநிலம் பகத் கி கோத்திக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (06181) இயக்கப்படும். அதே போல, பகத் கி கோத்தியில் இருந்து வருகிற 14-ந் தேதி முதல் மே 26-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) கோவைக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (06182) இயக்கப்படும்.
தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவில் இருந்து வருகிற 8-ந் தேதி முதல் ஜூன் 24-ந் தேதி வரை (திங்கட்கிழமை மட்டும்) மதுரைக்கு சிறப்பு ரெயில் (07191) இயக்கப்படும். அதே போல, மதுரையில் இருந்து வருகிற 10-ந் தேதி முதல் ஜூன் 26-ந் தேதி வரை (புதன்கிழமை மட்டும்) கச்சிகுடாவிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.