< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ராஞ்சி - விழுப்புரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
|3 Feb 2023 9:30 PM IST
ராஞ்சி - விழுப்புரம் இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ராஞ்சி - விழுப்புரம் இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ராஞ்சி - விழுப்புரம் (வண்டி எண் 08068) இடையே இரவு 11.55 மணிக்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 10,17 மற்றும் 24-ந்தேதிகளில் இயக்கப்படுகிறது.
விழுப்புரம் - ராஞ்சி (08067) இடையே மாலை 5.15 மணிக்கு செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 7,14,21 மற்றும் 28-ந்தேதிகளில் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.