< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
|27 Aug 2022 6:40 PM IST
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி முதல் ஜனவரி 26-ந்தேதி வரை இயக்கப்படும்
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
- திருநெல்வேலி-மேட்டுப்பாளையம்(06030) இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி முதல் ஜனவரி 26-ந்தேதி வரை இயக்கப்படும். இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
- மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி(06029) இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற செப்டம்பர் 2-ந்தேதி முதல் ஜனவரி 27-ந்தேதி வரை இயக்கப்படும். இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வெலி சென்றடையும்.
- திருநெல்வேலி-தாம்பரம்(06004) இடையே இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் திருநெல்வேலி-விருதுநகர் இடையே செல்லும் நேரம் வருகிற ஆகஸ்டு 28-ந்தேதி முதல் மாற்றப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் நேரம் 7.20 மணிக்கு மாற்றம்செய்யப்படுகிறது. இதேபோல் விருதுநகர் வரை ரெயில் செல்லும் நேரங்களில் மாற்றம் செய்யப்படுகிறது.