< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

வார விடுமுறை; கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் - கடும் போக்குவரத்து நெரிசல்

தினத்தந்தி
|
13 Aug 2023 11:17 AM IST

கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

கொடைக்கானல்,

மலைகளின் இளவரசி கொடைக்கானலில் கடந்த மூன்று தினங்களாக அவ்வப்போது கனமழை பெய்து வந்ததால் மிகவும் இதமான தட்பவெப்பநிலை நிலவுகிறது. மிகவும் ரம்மியமான சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் சரளமாக வருகை புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வார விடுமுறையை முன்னிட்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலாத்தலங்கள் மற்றும் நகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்வதில் சுற்றுலா பயணிகளுக்கு கடும் இன்னல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்தை சீரமைக்க போதிய போக்குவரத்து காவலர்கள் இல்லாத நிலையில் தொடரும் போக்குவரத்து நெரிசல் அவலங்களினால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்