< Back
மாநில செய்திகள்
வார இறுதி விடுமுறை; குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மாநில செய்திகள்

வார இறுதி விடுமுறை; குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
9 July 2022 10:19 PM IST

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

தென்காசி,

இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்கள் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்துள்ளனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், அங்குள்ள சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசைகளில் நின்று அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்