வார இறுதி விடுமுறை: சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு
|வார இறுதி விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு சென்னையில் பணியாற்றும் பிற ஊர்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்காக போதுமான பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
#JUSTIN || வார இறுதியில் சிறப்பு பேருந்துகள்
— Thanthi TV (@ThanthiTV) August 30, 2023
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 150 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு#GovtBus |#Chennai | #viluppuram pic.twitter.com/76uQN73U21