வார விடுமுறை எதிரொலி: சென்னை, காசிமேட்டில் களைகட்டும் மீன் விற்பனை
|இன்று விடுமுறை நாள் என்பதால், அதிகாலை முதலே மீன் வாங்க மீன்பிரியர்கள் காசிமேட்டில் குவிந்தனர்.
சென்னை,
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1200க்கு மேற்பட்ட விசைப்படகுகள், 800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடித் தொழிலை ஈடுபட்டு வருகின்றன. இங்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மக்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பொதுமக்கள் மீன்களை வாங்க இந்த காசிமேடு மீன் மார்க்கெட்டில் கூடுடுவது வழக்கம். அதேபோன்று நேற்று தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்களை வாங்க பொதுமக்களும், வியாபாரிகளும் குவிந்தனர்.
இந்த நிலையில், இன்று விடுமுறை நாள் என்பதால், அதிகாலை முதலே மீன் வாங்க மீன்பிரியர்கள் காசிமேட்டில் குவிந்தனர். இதனால், மீன் விற்பனை களைகட்டியுள்ளது.
வரத்து அதிகரித்த நிலையில், மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ.1,000, வவ்வாள் - ரூ.800, சங்கரா - ரூ.400, நெத்திலி -ரூ.250, இறால் - ரூ.400, நண்டு - ரூ.400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.