< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் களைகட்டும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி..!
|5 Nov 2023 11:10 AM IST
‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் ஞாயிற்றுக்கிழமை 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக நடத்தப்பட்டு வரும் இந்த 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சிக்கு மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் முதல் முறையாக சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இன்று 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் இசை, நடனம் என களைகட்டி வரும் இந்த 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியில் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.