< Back
மாநில செய்திகள்
சென்னையில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம்
மாநில செய்திகள்

சென்னையில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம்

தினத்தந்தி
|
21 May 2023 10:59 AM IST

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடல், பாடலுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு முதல் ஜி.பி.ரோடு சந்திப்பு வரை உள்ள பகுதியில் மகிழ்ச்சி தெரு கொண்டாட்ட நிகழ்ச்சி, ஏப்ரல் 30-ந்தேதி மற்றும் மே 7, 14, 21-ந்தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினங்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை அண்ணா சாலையில் தொடர்ந்து 4-ஆவது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி களைகட்டியுள்ளது. சென்னை மாநகராட்சியுடன் தனியார் அமைப்புகள் இணைந்து நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடல், பாடலுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்