< Back
மாநில செய்திகள்
திருமண வரவேற்பு விழா
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருமண வரவேற்பு விழா

தினத்தந்தி
|
11 Sept 2022 10:58 PM IST

தூத்துக்குடியில் தொழில் அதிபர் இல்ல திருமண வரவேற்பு விழா நடந்தது

தூத்துக்குடி மாநகராட்சி 17-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஸ்ரீராம் டி.ராமர்-ஞானரத்தினம் தம்பதியரின் மகள் தனுஜா, உமரிக்கோட்டை மாரியப்பன்-புஷ்பம் தம்பதியரின் மகன் சங்கர் ஆகியோரது திருமணம் நடந்தது.

இதைத் தொடர்ந்து திருமண வரவேற்பு விழா தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் திருமண மகாலில் நடந்தது.

விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், தி.மு.க. விவசாய அணி மாநில செயலாளருமான விஜயன் எம்.பி, துணை மேயர் ஜெனிட்டா, மீனவர் அணி மாநில துணை செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் சித்திரை செல்வன், 17-வது வார்டு வட்ட செயலாளர் மந்திரகுமார், தொழில் அதிபர்கள் கண்ணன், மாரிமுத்து, ஜாவித் ரிசுதீன், கோமதிநாயகம், கார்த்திக், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக விழாவுக்கு வந்தவர்களை ஸ்ரீராம் டி.ராமர்-ஞானரத்தினம், பிரேம் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.

மேலும் செய்திகள்