கள்ளக்குறிச்சி
திருமண ஆசைகாட்டி பெண்ணிடம் உல்லாசம்
|திருக்கோவிலூர் அருகே திருமண ஆசைகாட்டி பெண்ணிடம் உல்லாசம் விவசாயி கைது
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள இளையனார்குப்பம் கிராமத்தை சே்ாந்தவர் எழுமலை(வயது 50). இவர் சிறுபனையூர் கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த ஜான் என்பவருக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடு்த்து பயிர் சாகுபடி செய்து வந்தார். அந்த நிலத்தில் திருமணம் ஆகாத 34 வயது பெண் ஒருவர் வேலைக்கு வந்து சென்றார். அப்போது அந்த பெண்ணுக்கும், ஏழுமலைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணிடம் ஏழுமலை அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கர்ப்பம் அடைந்த அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஏழுமலையிடம் கூறினார். ஆனால் அவரோ திருமணம்செய்ய மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.