< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
மாணவர்களின் மனநலம் குறித்து ஆசிரியர்களுக்கு இணையதளம் வாயிலாக பயிற்சி
|19 Jun 2022 11:29 PM IST
மாணவர்களின் மனநலம் குறித்து ஆசிரியர்களுக்கு இணையதளம் வாயிலாக பயிற்சி நடந்தது.
தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 15 மையங்களில் தொழில்நுட்பம் மற்றும் மாணவர்களின் உடல் நலம், மனநலம் குறித்து இணையதளம் வாயிலாக ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. மாணவர்களுக்கு ஏற்படும் மன மாற்றம் மற்றும் அதற்கான தீர்வு, உடல் சம்பந்தமான பிரச்சினை முறைகள் குறித்து இணையதள வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி, வட்டார கல்வி அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் மேற்பார்வை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வம் செய்திருந்தனர். இதில் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள 436 ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.