< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நிர்ணயிக்கப்பட்ட ஆம்னி பேருந்து கட்டணம் வெளியான 24 மணி நேரத்தில் முடங்கிய இணையதளம்... காரணம் என்ன?
|22 Sept 2022 7:20 PM IST
ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, அந்த விவரங்களை அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இணையதளத்தில் வெளியிட்டது.
சென்னை,
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, அந்த விவரங்களை அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இணையதளத்தில் வெளியிட்டது.
கட்டண விவரம் வெளியாகிய 24 மணி நேரத்திற்குள் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆம்னி பேருந்து கட்டண விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக , கட்டணத் தொகையை பார்ப்பதற்கான தங்களது வலைதள முகவரி முடங்கி இருப்பதாகவும் விரைவில் சரி செய்யப்படும் எனவும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.