< Back
மாநில செய்திகள்
விவசாயி கொலையில் தலைமறைவான அண்ணனுக்கு வலைவீச்சு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

விவசாயி கொலையில் தலைமறைவான அண்ணனுக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
18 Oct 2023 1:00 AM IST

பேரிகை அருகே விவசாயி கொலையில் தலைமறைவான அண்ணனுக்கு வலைவீச்சு.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே கோட்டசாதனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 35). விவசாயி. இவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு உடல் அழுகிய நிலையில் அவருடைய வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதில் சொத்து பிரச்சினை காரணமாக பாலாஜியை அவருடைய அண்ணன் தனஞ்செயன் (38) என்பவர் தாக்கி கொன்று வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பி ஓடி விட்டதாக தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின்பேரில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் மேற்பார்வையில் பாகலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களுருவுக்கு சென்று தனஞ்செயனை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அவருடைய உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்