< Back
மாநில செய்திகள்
கிரானைட் கல் திருட முயன்றவர்களுக்கு வலைவீச்சு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கிரானைட் கல் திருட முயன்றவர்களுக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
28 Aug 2023 1:00 AM IST

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கம் மற்றும் கனிம வள துணை தாசில்தார் கோகுல கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் ஏரி சின்னகம்பட்டி அருகே ரோந்து சென்றனர். அப்பகுதியில் அனுமதியின்றி 2 டிராக்டரில் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள கிரானைட் கல்லை சிலர் வெட்டி எடுத்து திருட முயன்றனர். அதிகாரிகள் வருவதை பார்த்த அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து டிராக்டர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்