< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"முகமூடி அணியுங்கள்..." சுவரொட்டியால் குழம்பிய மக்கள்
|1 July 2022 6:43 PM IST
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் முகக்கவசத்திற்கு பதிலாக முகமூடி அணியுங்கள் என சுவரொட்டி ஒட்டப்பட்டதால், பொதுமக்கள் குழப்பமடைந்தனர்.
ராமநாதபுரம்,
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் முகக்கவசத்திற்கு பதிலாக முகமூடி அணியுங்கள் என சுவரொட்டி ஒட்டப்பட்டதால், பொதுமக்கள் குழப்பமடைந்தனர்.
கொரோனாவில் இருந்து பாதுகாப்பது முகக்கவசமா, அல்லது முகமூடியா என கேள்வி எழுப்பியதோடு, சிலர், சுவரொட்டியை பார்த்து குமுறிய மனநிலையுடனும், சிலர் சிரித்த முகத்துடனும் முகக்கவசம் அணியாமல் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.