நாமக்கல்
செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க சிறப்பு முகாம்
|நாமக்கல் கோட்டத்தில் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
நாமக்கல் அழகு நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாமக்கல் கோட்ட அஞ்சல் துறை சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம் நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் 25 குழந்தைகளுக்கு நடராஜபுரம் துணை அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டது. அவர்களுக்கு கணக்கு புத்தகங்களை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் பிள்ளை வழங்கினார்.
மேலும் அழகு நகர் நலச்சங்க நிர்வாகி ஸ்டாலின், பள்ளியில் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க தேவையான நிதிஉதவியை அளித்தார். இந்த நிகழ்ச்சியில் நடராஜபுரம் துணை அஞ்சலக அதிகாரி சங்கீதா, அஞ்சலக ஆயுள் காப்பீட்டு வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், வணிக வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், சேமிப்பு பிரிவு அலுவலர் அனிதா, அழகு நகர் நல சங்கத்தின் துணைத் தலைவர் மணி ராஜா, செயலாளர் ராமசாமி, பொருளாளர் வீராசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் கோட்டத்தில் இதுவரை 1,700 கணக்குகள் தொடங்கப்பட்டதாக அஞ்சலக அலுவலர்கள் தெரிவித்தனர்.