< Back
மாநில செய்திகள்
அதிமுகவில் ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்படுவோம் - இயக்குனர் பாக்யராஜ்
மாநில செய்திகள்

அதிமுகவில் ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்படுவோம் - இயக்குனர் பாக்யராஜ்

தினத்தந்தி
|
26 Aug 2022 6:27 PM IST

சென்னை, மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வத்தை இயக்குனர் பாக்யராஜ் இன்று சந்தித்தார்

சென்னை,

சென்னை, மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வத்தை இயக்குனர் பாக்யராஜ் இன்று சந்தித்தார்.ஓபிஎஸ் உடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பாக்யராஜ் கூறியதாவது ;

அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதிமுகவை வலுப்படுத்த வேண்டும்.அதற்கு அதிமுகவில் இணைந்து நானும் பணியாற்றவுள்ளேன்.தேவை ஏற்பட்டால் நானே நேரில் சென்று அனைவரையும் ஒருங்கிணைக்க பாடுபடுவேன்.ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்படுவோம்.

திருஷ்டி பரிகாரமாக ஒரு சோதனை வந்துள்ளது. மீண்டும் பழைய பலத்துடன் கட்சி இருக்க வேண்டும் என நினைத்து ஓ. பன்னீர்செல்வம் அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும் நானும் அதையே தான் கூறி வருகிறேன்

மீண்டும் அனைவரும் ஒன்றுபட்டு பழையபடி தொண்டர்களுக்கு புத்துணர்வு கிடைக்கும் வகையில் பலம் பெறும். அதற்கு என்னை இணைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டுமோ எப்படி செயல்பட வேண்டும் அப்படி செயல்பட தயாராக இருக்கிறேன். , சின்ன ஒரு தொண்டனாக இவர்கள் உடன் இருந்து கட்சி பணிகளை ஆற்ற தயாராக இருக்கிறேன்.

மேலும் செய்திகள்