ஜனநாயக யுத்தத்தில் இந்தியா கூட்டணியை பலப்படுத்துவோம் - கி.வீரமணி அறிக்கை
|ஜனநாயக யுத்தத்தில் இந்தியா கூட்டணியை பலப்படுத்துவோம் என்று கி.வீரமணி அறிக்கை வெளியிட்டார்.
சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு எப்படி உள்ளது? என்பதற்கு மணிப்பூரில் 3 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் உயிர் சேதங்கள், கலவரங்கள், தீ வைப்பு, பாலியல் வன்கொடுமைகள் போன்றவைகளை பார்க்கும்போது, நாம் நாகரிகமான ஒரு மனித சமூகத்தில் தான் வாழ்கிறோமா... என்ற கேள்வியை கேட்கவே தூண்டுகின்றன.
இதற்கு ஒரே விடை விடியல் தான். எனவே தலைவர்களே, மக்கள் தயாராகிவிட்ட நிலையில் தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் அணுகுமுறைகளையும் கூர்ந்து கவனித்து, தன்முனைப்புகளை சற்று தள்ளிவைத்து, நாட்டு நலம் மட்டுமே குறியாக ஓரணியில் திரண்டு தேர்தல் பேரணியாக இந்திய ஜனநாயக மீட்பு யுத்தத்தில் 'இந்தியா' கூட்டணியை பலப்படுத்தி, புதியதோர் அரசியல் திருப்பத்தை உருவாக்குங்கள் என்று அவர் கூறியுள்ளார்.