< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'சூழ்நிலை மாறாத வரை அ.தி.மு.க.வுடன் இணைய மாட்டோம்' - டி.டி.வி. தினகரன்
|3 Aug 2024 9:44 PM IST
சூழ்நிலை மாறாத வரை அ.தி.மு.க.வுடன் இணைய மாட்டோம் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை கிண்டியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"அ.ம.மு.க. கட்சி ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகின்றன. நாங்கள் எந்த சூழ்நிலையில், எந்த காரணத்திற்காக இந்த கட்சியை ஆரம்பித்தோமோ, அதில் எந்த மாற்றமும் நடக்காத வரை, அ.தி.மு.க.வுடன் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க.வின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம். தொண்டர்கள் ஒன்று சேர்ந்து அவரை விரட்டும் காலம் விரைவில் வரும்."
இவ்வாறு டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.