< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பாரதம் என்ற குடும்பமாக நாம் ஒன்றிணைந்து வாழ்வோம் - கவர்னர் ஆர்.என்.ரவி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
|6 Sept 2023 12:36 PM IST
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கவர்னர் ரவி, 'பாரதம் என்ற குடும்பமாக நாம் ஒன்றிணைந்து வாழ்வோம்' என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை
கிருஷ்ணரின் பிறந்த நாளான இன்று கிருஷ்ண ஜெயந்தி (செப்.,6) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,
கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
பகவான் கிருஷ்ணரின் நித்திய போதனைகள் நம் கடமைகளை சரியாகவும் நேர்மையாகவும் ஆற்ற தொடர்ந்து ஊக்கமளித்து பாரதம் என்ற குடும்பமாக நாம் ஒன்றிணைந்து வாழ்வோம். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.