< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'தயாநிதி மாறனின் அவதூறு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
|18 April 2024 9:18 PM IST
தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை,
மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை அ.தி.மு.க. சட்டரீதியாக எதிர்கொள்ளும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"எழும்பூர் நடுவர் நீதிமன்றத்தில் மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் ஒரு அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். பத்திரிக்கையில் வெளியான செய்தியின் அடிப்படையில்தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்திருந்தார். இதற்காக தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை அ.தி.மு.க. சட்டரீதியாக எதிர்கொள்ளும்."
இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.