< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் - அமைச்சர் துரைமுருகன்
|1 May 2024 10:20 AM IST
கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய முறைப்படியான தண்ணீரை வழங்காமல் கர்நாடகம் இழுத்தடித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க முடியாது என நேற்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் கர்நாடகம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக அரசின் இந்த நிலைப்பாடு குறித்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மத்திய அரசு, நீதிமன்றத்தை மதிக்காமல் கர்நாடக அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது. என்றாவது, ஒருநாளாவது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என கர்நாடக அரசு கூறியுள்ளதா?. அதிகம் இருந்தாலும், குறைவாக இருந்தாலும் தண்ணீர் தரமாட்டோம் என்றுதான் கர்நாடக அரசு கூறுகிறது. நீர் தர மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டை நாட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.