< Back
மாநில செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்: வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ
மாநில செய்திகள்

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்: வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ

தினத்தந்தி
|
21 Dec 2023 12:51 PM IST

பழிவாங்கும் நோக்கத்தில் பொன்முடிக்கு எதிரான வழக்கு போடப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கூறினார்.

சென்னை,

பொன்முடிக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம் என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கூறியதாவது:

* பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது.

* சொத்துக்குவிப்புக்கு ஆதாரங்கள் இல்லாததால்தான் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது

* குறித்த நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்யாததை வைத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

* சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து விரைவில் மேல் முறையீடு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்