< Back
மாநில செய்திகள்
ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்: அண்ணாமலை பேட்டி
மாநில செய்திகள்

ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்: அண்ணாமலை பேட்டி

தினத்தந்தி
|
9 Feb 2023 10:10 AM IST

அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அண்ணாமலை கூறினார்.

ஈரோடு,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது: ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளர் நிச்சயம் வெற்றிபெறுவார். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இடைத்தேர்தலில் முதல் அமைச்சர் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இது ஒரு சாதாரண இடைத்தேர்தல். திமுகவினர் அனைவரும் ஈரோடு கிழக்கில் தான் உள்ளனர்.

ஒரு ஆளுங்கட்சி, இடைத்தேர்தலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது தமிழக வரலாற்றில் நடைபெற்றது கிடையாது. இதில் இருந்தே திமுக பயந்துள்ளது தெரிய வந்துள்ளது.

திமுக வேட்பாளர் பேசினாலே எங்கள் பக்கம் தானாக வாக்குகள் வந்து சேர்ந்துவிடும். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம் . இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்