< Back
மாநில செய்திகள்
மானிய விலையில் விதைகள் வேண்டும்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மானிய விலையில் விதைகள் வேண்டும்

தினத்தந்தி
|
5 Sept 2023 12:00 AM IST

மானிய விலையில் விதைகள் வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பகுதியில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இவர்கள் பருவ மழையின்போது மானாவாரி பயிர்களை பயிரிடுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது பருவமழை பெய்து வருவதால், விவசாயிகளுக்கு அரசு மானிய விலையில் சோளம் மற்றும் பருத்தி விதைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவற்றில் எவ்வாறு லாபம் பார்ப்பது என்பது குறித்து வேளாண் அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்