< Back
மாநில செய்திகள்
நாம் தமிழர் கட்சியினர் கோட்டாட்சியரிடம் மனு
திருச்சி
மாநில செய்திகள்

நாம் தமிழர் கட்சியினர் கோட்டாட்சியரிடம் மனு

தினத்தந்தி
|
7 Sept 2023 12:53 AM IST

நாம் தமிழர் கட்சியினர் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

நாம் தமிழர் கட்சியின் லால்குடி தொகுதி சுற்றுச்சூழல் செயலாளர் சைமன் ராஜ் லால்குடி கோட்டாட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- இடையாற்றுமங்கலம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரிக்கு அருகில் நீரில் மூழ்கி உயிரிழப்புகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதை தடுக்க அப்பகுதியில் எச்சரிக்கை பதாகை வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதேபோல் லால்குடி பகுதியில் புதிதாக அமைந்துள்ள திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் நடக்கின்றது. இதற்கு மக்களுக்கு போதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இல்லாததே காரணம். எனவே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்