< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|1 Oct 2023 10:54 AM IST
திருவள்ளூரில் ரெயில் நிலையம் அருகே கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தமிழகத்திற்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், ஒன்றிய அரசை கண்டித்தும், தமிழ்நாடு அரசை கண்டித்தும், தமிழகம் முழுவதும் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதேபோல் திருவள்ளூரில் ரெயில் நிலையம் அருகில் நேற்று காலை மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மண்டல செயலாளர் ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் ஜெகன், லிங்கேஸ்வரன், மோகன், ஜெகதீசன் உட்பட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த நாம் தமிழர் கட்சியினர் சுமார் 100 பேர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.