< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|20 Jun 2022 1:01 AM IST
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
லால்குடி:
லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வக்கீல் பிரபு தலைமை தாங்கினார். லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வடகிழக்கு மாவட்ட செயலாளர் பழனியப்பா, வடகிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்ஆனந்த், துணை செயலாளர் செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.