< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் சமூகநீதியை வலுப்படுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
மாநில செய்திகள்

தமிழகத்தில் சமூகநீதியை வலுப்படுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

தினத்தந்தி
|
25 Jun 2022 1:55 PM IST

தமிழகத்தில் சமூகநீதியை வலுப்படுத்த வேண்டும் என டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

சாமானியர்களுக்கான சமூகநீதியைக் காக்க ஆட்சி மகுடத்தை உதறித் தள்ளிய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் 92-வது பிறந்தநாள். இந்தியாவில் சமூக நீதியை பாதுகாக்க அவர் செய்த தியாகங்களும், அவர் காட்டிய உறுதிப்பாடும் ஈடு இணையற்றவை.

தமிழ்நாட்டில் சமூகநீதியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன. அவற்றை செய்து முடிக்க வேண்டியது நமது கடமை. அதற்கான சமூகநீதி பயணத்தை இன்னும் வேகமாக முன்னெடுக்க சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்த நாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்