விருதுநகர்
மனைவிக்கு தொல்லை அளித்ததால் கொன்றோம்
|மனைவிக்கு தொல்லை அளித்ததால் கொன்றோம் என கைதான தொழிலாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 40). கூலித்தொழிலாளியான இவருக்கு ரமேஷ் குமாரி என்ற மனைவியும், கணேஷ்ராஜ் (19) என்ற மகனும் உள்ளனர். அதேபகுதியை சேர்ந்த கண்ணன் என்ற அன்பழகனுக்கும் (31), ரமேஷ்குமாரிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதை பலமுறை கனகராஜ் கண்டித்ததாகவும் தெரிகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு மனைவியை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு கனகராஜ் வீட்டில் இருந்தார்.
இதற்கிடையே அன்பழகன் அவரது உறவினர் வீட்டில் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தார். இதை அறிந்த கனகராஜ் மற்றும் அவரது மகன் கணேஷ் ராஜ் ஆகிய 2 பேரும் சேர்ந்து அன்பழகனை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அன்பழகன் உயிரிழந்தார்.
இதுகுறித்து சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். கனகராஜ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எனது மனைவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், மகனுடன் சேர்ந்து அவரை கொலை செய்தோம் என கூறினார்.