< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டோம், வரும் தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டோம், வரும் தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
27 Aug 2023 10:39 AM IST

நாகை எம்பி செல்வராஜ் இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

திருவாரூர்,

திருவாரூரில் இன்று நாகை எம்.பி. செல்வராஜ் இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மண மக்களை வாழ்த்தினார். பின்னர், அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அதில், உழவர்களுக்காக நாகையில் 50 இடங்களில் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர் எம்பி செல்வராஜ் என அவரை பாராட்டினார். மேலும் செல்வராஜ் 4 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளார். அனைத்து தடவையும் திமுக கூட்டணியில் இருந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை திருவாரூரில் இருந்தே தொடங்கிவிட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சி உடனான கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் . தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டோம். வரும் தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் . மும்பையில் நடைபெற உள்ள 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன' என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும் செய்திகள்