< Back
மாநில செய்திகள்
கூடுதல் இடங்களை ஒதுக்குமாறு கேட்டுள்ளோம்: இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன் பேட்டி
மாநில செய்திகள்

கூடுதல் இடங்களை ஒதுக்குமாறு கேட்டுள்ளோம்: இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன் பேட்டி

தினத்தந்தி
|
3 Feb 2024 7:56 PM IST

திமுக உடனான பேச்சுவார்த்தை இணக்கமாக தொடங்கியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பிராயன் கூறினார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழு இன்று பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி, மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின்னர் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் எம்பி சுப்பராயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "திமுக உடனான பேச்சுவார்த்தை இணக்கமாக தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீட்டில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம். கடந்த முறையை விட கூடுதல் இடங்களை ஒதுக்குமாறு கேட்டுள்ளோம்." என்றார்.

மேலும் செய்திகள்