< Back
மாநில செய்திகள்
பார்த்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்! - அண்ணாமலை டுவீட்
மாநில செய்திகள்

பார்த்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்! - அண்ணாமலை டுவீட்

தினத்தந்தி
|
23 Jun 2022 7:41 PM IST

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஒட்டன்சத்திரத்தில், உணவுத்துறை அமைச்சர் திரு சக்கரபாணியின் தூண்டுதலின் பேரில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து, திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் பழனி கனகராஜ் தலைமையில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தது தமிழக பாஜக.

இந்நிலையில், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய பாஜக நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்குத் தொடுத்து 6 பேரைக் கைது செய்துள்ளது திமுக அரசு. கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை வெளியே கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் தமிழக பாஜக செய்து வருகிறது.

எங்கள் நிர்வாகிகள் சிறையிலிருந்து வெளியே வரும்போது அவர்களை வரவேற்க தமிழக பாஜக தயாராக இருக்கும். பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்!" என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்