< Back
மாநில செய்திகள்
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
19 Nov 2022 2:17 AM IST

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அழகியபாண்டியபுரம்:

கீரிப்பாறையில் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு ேகாரிக்கையை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி முதல் காத்திருப்போர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று மாலையில் தடிக்காரன்கோணம் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி செயலாளர் ரூபன் தலைமை தாங்கினார். தடிக்காரன்கோணம் ஊராட்சி செயலாளர் செல்லத்தாய், மண்டல செயலாளர் பெல்வின் ஜோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கிம்லர் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் சந்தானம், பொருளாளர் ஹெலின் மற்றும் கட்சி தொண்டர்கள், அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்