< Back
மாநில செய்திகள்
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
1 Oct 2023 12:00 AM IST

பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் தங்க.ரத்தினவேல் தலைமை தாங்கினார். கட்சியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் தமிழகத்திற்கு காவிரி நதி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக மாநில அரசை கண்டித்தும், அதனை கண்டிக்க தவறிய மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், காவிரி நதி நீர் பிரச்சினைக்கு மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்