< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|1 Oct 2023 12:00 AM IST
அரியலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தஞ்சை கரிகாலன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.