புதுக்கோட்டை
லாரியை சிறைபிடித்த நாம் தமிழர் கட்சியினர்
|பனை மரங்களை வெட்டி ஏற்றி சென்ற லாரியை நாம் தமிழர் கட்சியினர் சிறைபிடித்தனர்.
கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் இரவு பனை மரங்களை வெட்டி செங்கல் சூளைக்காக லாரிகளில் ஏற்றி அனுப்பப்படுவதையறிந்த நாம் தமிழர் கட்சியினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள், தமிழக அரசு பனை மரங்களை வளர்க்க வேண்டும். இருக்கும் மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று ஊராட்சிகளில் பனை விதைகளை நடவு செய்ய உத்தரவிட்டுள்ளது. அதனால் நிலத்தடி நீரை பாதுகாக்கும் பனை மரங்களை வெட்டக் கூடாது என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் ஒரு லாரியில் பனை மரங்கள் ஏற்றி கொண்டு செல்வதைப் பார்த்த நாம் தமிழர்கட்சியினர் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் லாரியை சிறைபிடித்தனர். தொடர்ந்து பனை மரங்களை கீழே இறக்கிவிட்டு லாரியை மட்டும் திருப்பி அனுப்பி வைத்தனர். கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் அடிக்கடி பனை மரங்கள் வெட்டி ஏற்றப்படுவதை தடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி இளைஞர்கள்.