திமுகவுடன் உண்மையான தோழமையோடு இருக்கிறோம் - செல்வப்பெருந்தகை பேட்டி
|காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
கோவை,
கோவையில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் சிறிய கட்சிகள் கூட நாங்கள் ஆட்சி அமைப்போம் என்கின்றனர். அதனால், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்போம் என்று கூறுவதில் எவ்வித தவறும் இல்லை. இது கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது.
எங்கள் கட்சியை நாங்கள் வலிமைப்படுத்தினால் தோழமை கட்சிகள்தான் வலிமை பெறும். எங்கள் கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்துவது எங்களின் ஜீவாதார உரிமை. நாங்கள் (காங்கிரஸ்) திமுகவுடன் உண்மையான தோழமையோடு இருக்கிறோம். கட்சியை வலிமைப்படுத்துவது வேறு, தோழமை என்பது வேறு. இந்த இரண்டையும் நீங்கள் ஒன்றாக பார்க்கக்கூடாது. நாங்கள் திமுகவோடு இணக்கமாக இருக்கிறோம்.
திமுக கூட்டணியை விட்டு வெளியே செல்ல வாய்ப்பு இல்லை. கூட்டணி கட்சிகளால் நிர்வாகிகளுக்கு சில சங்கடங்கள் இருக்கிறது. நிர்வாகிகளுக்கு தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதை நாங்கள் முன்னெடுப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. கட்சியின் கட்டமைப்பை சரிசெய்ய எங்களுக்கு உரிமை இருக்கிறது. அதை நாங்கள் செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.