< Back
மாநில செய்திகள்
எம்ஜிஆர் வேடத்தில் ஈபிஎஸ்ஸை பார்த்து தொண்டர்களும் பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர்- ஓபிஎஸ்
மாநில செய்திகள்

எம்ஜிஆர் வேடத்தில் ஈபிஎஸ்ஸை பார்த்து தொண்டர்களும் பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர்- ஓபிஎஸ்

தினத்தந்தி
|
7 April 2023 1:12 PM IST

அதிமுக பிரச்சினைக்கு முடிவு காண மக்களிடம் செல்ல இருக்கிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை,

சென்னையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும். கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் எங்கள் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.

எம்ஜிஆர் வேடத்தில் எடப்பாடி பழனிசாமியை பார்த்து தொண்டர்களும் பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர். என்னைபோல் யாரும் வர முயற்சிக்க வேண்டாம் என எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.

அதிமுகவில் பிளவுகள் ஏற்பட்ட போதெல்லாம் சரியான தீர்ப்பை மக்கள் தான் வழங்கினார்கள். அதிமுக பிரச்சினைக்கு முடிவு காண மக்களிடம் செல்ல இருக்கிறோம். வரும் 24ம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெற உள்ளது. நாளை சென்னை வரும் பிரதமரை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன். இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் கருத்து பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'பதில் சொல்ல விரும்பவில்லை' என ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்