< Back
மாநில செய்திகள்

சிவகங்கை
மாநில செய்திகள்
முன்னாள் ராணுவ வீரரை தாக்கி வழிப்பறி

18 May 2023 12:15 AM IST
முன்னாள் ராணுவ வீரரை தாக்கி வழிப்பறி
காளையார்கோவில்
காளையார்கோவில் அருகே புலிக்கண்மாய் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 43). முன்னாள் ராணுவ வீரர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 6 பேர் அவரை வழிமறித்து தாக்கி 2 பவுன் தங்கசங்கிலியை பறித்தனர். மேலும் அவரது செல்போனில் இருந்து ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலம் ரூ.1 லட்சத்தை மாற்றியும், செல்போனையும் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து காளையார்கோவில் போலீசில் அவர் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.