< Back
மாநில செய்திகள்

சிவகங்கை
மாநில செய்திகள்
கத்தியை காட்டி மோட்டார்சைக்கிள் வழிப்பறி

17 March 2023 12:15 AM IST
கத்தியை காட்டி மிரட்டி மோட்டார்சைக்கிளை பறித்து சென்றனர்.
திருப்புவனம்
பூவந்தி அருகே உள்ள படமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 47). இவர் மதுரையில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். வேலை முடிந்து தினமும் இரவு தனது மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு வருவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு வந்துள்ளார். படமாத்தூர் விலக்கு அருகே வரும்போது 2 மர்ம நபர்கள் ராஜேந்திரனை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவருடைய மோட்டார்சைக்கிள் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.