< Back
மாநில செய்திகள்
வயநாடு நிலச்சரிவு: விசிக சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி
மாநில செய்திகள்

வயநாடு நிலச்சரிவு: விசிக சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி

தினத்தந்தி
|
12 Aug 2024 6:04 PM IST

ரூ.15 லட்சம் மதிப்புள்ள காசோலையை கேரள முதல் மந்திரியிடம் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. வழங்கினார்.

சென்னை,

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வயநாடு நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரள மாநிலத்துக்கு நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினர் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவையொட்டி பேரிடர் நிவாரண நிதியாக ரூ.15 லட்சம் மதிப்புள்ள காசோலையை கேரள முதல் மந்திரி பினராயி விஜயனிடம் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. வழங்கினார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்