< Back
மாநில செய்திகள்
தர்பூசணி கிலோ ரூ.15-க்கு விற்பனை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தர்பூசணி கிலோ ரூ.15-க்கு விற்பனை

தினத்தந்தி
|
7 April 2023 1:02 AM IST

தர்பூசணி கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கந்தர்வகோட்டை ஒன்றியம் முதுகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் தர்பூசணி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதாலும், இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு இருந்து வருவதாலும் தர்பூசணி அதிகளவில் தேவைப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல விலைக்கு தர்பூசணி விற்பனையாகி வருகிறது. 60 நாட்கள் கொண்ட இந்த தர்பூசணி விளைச்சல் ஏக்கர் ஒன்றுக்கு 15 டன் மகசூல் கிடைக்கிறது. கிலோ ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அதிக வருமானம் பெறக்கூடிய விவசாயமாக தர்பூசணி உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்