< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
மீண்டும் விற்பனைக்கு வந்த தர்பூசணி
|10 Aug 2023 12:15 AM IST
எஸ்.புதூர் பகுதியில் மீண்டும் தர்பூசணி விற்பனைக்கு வந்தது
எஸ்.புதூர்
பொதுவாக தர்பூசணி பழங்கள் கோடை காலமான பங்குனி, சித்திரை மாதங்களில் கத்தரி வெயில் நேரங்களில் கிடைக்கும்.
விற்பனையும் அதிக அளவில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கத்தரி வெயில் காலம் முடிவடைந்து பல வாரங்கள் ஆன நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் மீண்டும் தர்பூசணி பழங்கள் எஸ்.புதூர் பகுதியில் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு கிலோ ரூபாய் 30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பொதுமக்களும் வெயிலின் தாக்கத்தை குறைக்க தர்பூசணி பழத்தை விரும்பி வீட்டிற்கு வாங்கி செல்கின்றனர்.