< Back
மாநில செய்திகள்
நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யலாம் கலெக்டர் தகவல்
சிவகங்கை
மாநில செய்திகள்

நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யலாம் கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
29 July 2023 12:30 AM IST

நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யலாம் என கலெக்டர்தெரிவித்தார்.


விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டத்தின் படி சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, திருப்புவனம் மற்றும் இளையான்குடி வட்டங்களில் விடுபட்ட நீர்வள, நிலவள திட்டங்களின் கீழ் நீர்வளத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் நில உடைமையாளர் பட்டியலின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலகத்தில் பாசனதாரர்கள் பார்வைக்காக தற்போது முதல் இருவார காலம் வைக்கப்பட்டிருக்கும். பாசனதாரர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளும்படியும், பெயர் இடம் பெறாதவர்கள் பெயர் சேர்ப்பதற்கான படிவத்தை பூர்த்திசெய்து அத்துடன் அதற்கு தேவையான ஆவணத்தை கிராம நிர்வாக அலுவலர்களிடம் கொடுக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பெயர் சேர்ப்பதற்கு மறுப்பு தெரிவிக்க விரும்புவோர் மற்றும் பெயர் நீக்க விரும்புவோரும் அதற்கான படிவத்தை பூர்த்திசெய்து கிராம நிர்வாக அலுவலர்களிடம் உரிய காலத்திற்குள் கொடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. வாக்காளர் பட்டியலை முழுமையாக சரிசெய்ய ஏதுவாக அதற்கான பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் மறுப்பு தெரிவித்ததற்கான படிவங்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்